தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு - கண்ணீர் வடிக்கும் தாய், தந்தை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

current shock death
current shock death

By

Published : Dec 19, 2020, 10:32 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் ஊராட்சி சிறுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து -குப்பம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இரண்டாவது மகன் பிறந்து எட்டு மாதங்கள் ஆனது. கூலித்தொழிலாளியான மாரிமுத்து இன்று(டிச.19) அதிகாலை வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், மூத்த மகன் விஷ்ணுவுடன் (4), எட்டு மாத குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது வீட்டினுள் இருந்த மின்சார பெட்டியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது. நான்கு வயது சிறுவன் அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு உடனடியாக லட்சிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவல் நிலைய அலுவலர்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:குடிநீரில் கலக்கும் கரித்துகள்: எண்ணெய் ஆலையை முற்றுகையிட்ட மக்கள்

ABOUT THE AUTHOR

...view details