தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சமூக வலைதளத்தில் அவதூறுப் பதிவு - காவல் துறையால் தேடப்படும் இந்து சபா நிர்வாகியின் ஓட்டுநர்கள் கைது!

சென்னை: சமூக வலைதளத்தில் அவதூறுப் பதிவுகள் செய்ததாக, பாலியல் புகாரில் தேடப்பட்டுவரும் அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டனின் ஓட்டுநர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

mahasabha
mahasabha

By

Published : Feb 1, 2020, 3:15 PM IST

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 08-01-2020 அன்று அளித்த புகாரின் அடிப்படையில், அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஶ்ரீ என்ற ஶ்ரீகண்டன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவந்தனர்.

இதனிடையே, இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டனின் மனைவி நான்சி, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கணவரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை திருப்பிக் கேட்டதற்கு வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிரஞ்சனி தவறான நடவடிக்கையை கொண்டவர் என்றும் தெரிவித்தார். நிரஞ்சனி பலருடன் இருக்கக்கூடிய புகைப்படங்களையும் அப்போது அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இந்நிலையில், தொடர்ந்து தன்னை சமூக வலைதளங்களில் ஶ்ரீகண்டனும் அவருடைய ஆட்களும் இழிவுப்படுத்திவருவதாக, நிரஞ்சனி இணையதளம் வாயிலாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21ஆம் தேதி புகார் அளித்தார்.

அதனடிப்படையில், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சமூக வலைதளத்தில் அவதூறு பதிவுகள் செய்ததாக ஸ்ரீகண்டனின் ஓட்டுநர்கள் ஜெயபாலாஜி, நடராஜன் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக தலைமறைவாக உள்ள கோடம்பாக்கம் ஸ்ரீகண்டனை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை

ABOUT THE AUTHOR

...view details