விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பாண்டிச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் ஆணையர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இனறு அதிகாலை 5 மணிக்கு அரசூர் - பண்ருட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.