விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் சோதனைச்சாவடியில் நேற்றிரவு போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த TN- 21 CB 1237 பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து மது கடத்தியவர் கைது - கைது
விழுப்புரம்: புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள்
அந்த சோதனையின்போது எவ்வித உரிமமும் இல்லாமல் இரண்டு சாக்கு மூட்டைகளில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 1,225 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருபுவனை பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஷித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.