தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியவர் கைது! - ஆய்வாளர்

மாமனார் வீட்டில் தங்கியிருந்தபோது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியவரை மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கர்ப்பமாக்கியவர் கைது
கர்ப்பமாக்கியவர் கைது

By

Published : Oct 13, 2020, 11:13 PM IST

Updated : Oct 14, 2020, 7:25 PM IST

மயிலாடுதுறை : சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வரும் நபர் ஒருவர், ஊரடங்கு அமலில் இருந்த மே மாதத்தில் தனது மனைவியுடன், மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கே மனைவியின் சகோதரியான 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததுடன் அதை யாரிடமும் கூறக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இது போல பலமுறை நடந்துள்ளார். இந்த நிலையில், அண்மையில் அச்சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சேர்த்து சிறுமியைப் பரிசோதனை செய்ததில், அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், தொடர்ந்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுமியிடம் புகார் பெற்று, சிறுமியின் அக்கா கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:அதிகரிக்கும் சாதிய பாகுபாடு: ஊராட்சி மன்ற உப தலைவர் மீது ஊராட்சித் தலைவர் புகார்

Last Updated : Oct 14, 2020, 7:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details