உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்களை துரத்தி பிடிக்கச் சென்ற தலைமைக் காவலர் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டார்.
ஆக்ரா பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது குறித்து காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் போட்ரே ரோஹன் பிரமோத் உத்தரவின்படி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் சயான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்போது சயான் - கெராகர் சாலை வழியாக 6 டிராக்டர்களில் மணல் கடத்தி சென்றதை தலைமைக் காவலர் சோனு குமார் சவுத்ரி கண்டுள்ளார். பின்னர் அந்த வாகனங்களை துரத்திச் சென்று நிறுத்த முயன்றுள்ளார். அதுசமயம் அவரின் மீது டிராக்டரை ஏற்றி கடத்தல் காரர்கள் கொன்றுள்ளனர்.