ஆந்திர மாநிலம் சமல்கோட் காவல் நிலையத்தில் பிரபாவதி என்பவர் தன்னுடைய மகளை நடிகை பானுப்பிரியா, அவரது சகோதரர் கோபால் ஆகிய இருவரும் கொடுமைப்படுத்துவதாகப் புகார் அளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த சமல்கோட் காவல் துறையினர் பானுப்பிரியா, கோபால் ஆகிய இருவர் மீதும் சிறார்களை கொடுமைப்படுத்துதல், குழந்தை தொழிலாலர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறுமியைக் கொடுமைபடுத்திய வழக்கு... பானுப்பிரியா மீது விசாரணையை தொடங்கிய சென்னை போலீஸ்! - நடிகை பானுப்பிரியா வழக்கு
சென்னை: ஆந்திர சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் பானுப்பிரியா மீதான விசாரணையை பாண்டி பஜார் காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.
banupriya
ஆனால், குற்றம் நடந்த சம்பவங்கள் அனைத்துமே சென்னையில் இருப்பதால், அது தங்களுடைய எல்லைக்குள் வரவில்லை என்று கூறினர். மேலும், அந்த வழக்கை சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு மாற்றினர். இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வழக்கு பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, இதுதொடர்பான விசாரணையை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.
Last Updated : Sep 20, 2019, 1:15 PM IST