தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வீட்டு வாசலில் மாடுகள் கட்டியதைத் தட்டிக் கேட்டவர் மீது ஆசிட் வீச்சு: 3 பேர் கைது!

மயிலாடுதுறை: வீட்டுவாசலில் மாடுகள் கட்டி வைத்ததைத் தட்டிக்கேட்டவர் மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

ஆசிட் வீச்சு
ஆசிட் வீச்சு

By

Published : Nov 17, 2020, 2:49 AM IST

மயிலாடுதுறை வடக்கு ராமலிங்கத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் மணிகண்டன்(32). கடலூரில் மருந்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நாகராஜ்(45).

மணிகண்டன் வீட்டு வாசலில் நாகரஜன் மாடுகளைக் கட்டி வைத்திருப்பதால், சுகாதாரக் கேடு ஏற்படுவதாகக் கூறி இதுகுறித்து நாகராஜை மணிகண்டன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மணிகண்டனுக்கு ஆதரவாக, அவரது தந்தை சங்கர்(65), சகோதரர்கள் மாணிக்கராஜ் (34), ஜெகன் (28) ஆகியோர் பேசியுள்ளனர். இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில், மணிகண்டன் தரப்பு, நாகராஜை தாக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், அருகில் இருந்த ஆசிட்டை எடுத்து வீசியதில், மணிகண்டனுக்கு கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகராறு குறித்து, இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் துறையினர், ஆசிட்டை வீசிய நாகராஜ், மணிகண்டன், சங்கர், மாணிக்கராஜ், ஜெகன் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், நாகராஜ், மாணிக்கராஜ், ஜெகன் ஆகிய மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் இடத்தகராறால் துப்பாக்கிச் சூடு: தொழிலதிபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details