ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சகோதரரின் முகத்திரையை கிழித்த ஆவின் அலுவலர்; வழக்கறிஞர் மிரட்டல்! - திருப்பூர் ஆவின் மோசடி

பல லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக வழக்கறிஞரின் சகோதரர் மீது, ஆவின் அலுவலர் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

aavin scam, ஆவின் மோசடி, ஆவின் மோசடி தீபன் சக்கரவர்த்தி, aavin scam deepan chakravarthy, aavin scam in thiruppur, திருப்பூர் ஆவின் மோசடி
thiruppur aavin scam
author img

By

Published : Nov 19, 2020, 12:29 PM IST

சென்னை:ஆவின் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை நந்தனம் டர்ன்புல்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆவின் தலைமையிட அலுவலகத்தில் அபிவிருத்தி அலுவலராக பணிபுரிந்து வருபவர் அலெக்ஸ்(52).

இவர் திருப்பூரிலுள்ள ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அங்கு பல லட்சம் ரூபாய் கையாடல் நிகழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவின் நிர்வாகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளார்.

இதனையடுத்து மோசடி குறித்து விசாரணை நடத்தியபோது, ஆவின் நிறுவனத்தின் மேலாளரான தீபன் சக்கரவர்த்தி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து அலெக்ஸ் நிர்வாக உயர் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபன் சக்கரவர்த்தி மதுரையில் வழக்கறிஞராக உள்ள தனது சகோதரர் மிதுன் சக்கரவர்த்தியிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

உடனே மிதுன் சக்கரவர்த்தி அலெக்ஸிற்கு கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு, தனது சகோதரர் மீது சுமத்தப்பட்ட புகாரை உடனே வாபஸ் வாங்குமாறும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்தபோன அலெக்ஸ், உடனே தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details