பெங்களூரிலிருந்து ஷிமோகா நோக்கிச் சென்ற ரயிலில், சஹானா (24) என்ற பெண், தன் தாயாருடன் பயணம் செய்தார். அப்போது, ரயில் படிக்கட்டில் நின்று தனது நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். ரயில், ஷிமோகா நகரின் துங்கா நதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அதில், படிக்கட்டில் நின்ற சஹானா எதிர்பாராத விதமாக, கீழே தவறி விழுந்து துங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், அப்பெண்ணின் தந்தை, தனது மனைவியையும், மகளையும் அழைத்து செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தார். ரயில் நிலையத்திற்கு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னர் ஆற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சஹானாவின் தந்தை, மனைவியிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.