புதுக்கோட்டை மாவட்டம், திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யநாதன். இவருக்கு யோகா ஸ்ரீ, பாலா ஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், தாய் மாமா வீடான பூவை மாநகரில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் யோகா ஸ்ரீ 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே, நவம்பர் 19ஆம் தேதி தனது பாட்டியுடன் கோபித்துக்கொண்டு யோகா ஸ்ரீ புதுக்கோட்டைக்கு சென்று விட்டார். இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.
புதுக்கோட்டை அம்மா உணவகத்துக்கு வந்த யோகா ஸ்ரீ, அங்கு உணவு கேட்டிருக்கிறார். கைப் பையுடன் நின்றிருந்த அந்தப் சிறுமியிடம் அம்மா உணவக பணியாளர் அமுதா விசாரித்தபோது, வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வந்தது தெரியவந்தது.