சென்னை புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் சென்னை வானகரத்தில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார். இவரது கணவர் திவாகர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருடைய மகன் சாய் பிரசாத் (14), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
கடந்த 20ஆம் தேதி அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்ற சாய் பிரசாத் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த புஷ்பா அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் தேடியுள்ளார். எங்கு தேடியும் தனது மகன் கிடைக்காததால் புழல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.