தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தொடர் கள்ளச் சாராய கடத்தல்கள்; 810 லிட்டர் பிடிபட்டது! - கள்ளச்சாராயம் கண்டுபிடித்து அழிப்பு

3950 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. 810 லிட்டர் கடத்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

By

Published : May 23, 2020, 10:46 PM IST

திருவண்ணாமலை: 3950 லிட்டர் கள்ளச் சாராய ஊறலை அழித்து, 810 லிட்டர் கள்ளச் சாராயம் கடத்திய 5 பேரை மதுஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தண்டராம்பட்டு தாலுக்கா தட்டரணை பகுதியில் மதுவிலக்கு தேடுதல் வேட்டை நடத்தியதில், 1650 லிட்டர் சாராய ஊறல், வேப்பூர் செக்கடி பகுதியில் 2000 லிட்டர் சாராய ஊறல், திருவண்ணாமலை தாலுக்கா அக்கரப்பட்டி பகுதியில் 300 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

மேலும், செய்யாறு தாலுக்கா வெங்கடராயன்பேட்டை பகுதியில் 180மில்லி கொள்ளளவு கொண்ட 26 மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த நாகராஜ், என்பவரையும், தண்டராம்பட்டு தாலுக்கா வேப்பூர்செக்கடி பகுதியில் 670 லிட்டர் கள்ளச் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த கோவிந்தராஜ், என்பவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்,

கள்ளச்சாராயம் கண்டுபிடித்து அழிப்பு

ஜமுனாமரத்தூர் தாலுக்கா வீரப்பணுர் பகுதியில் 10 லிட்டர் கள்ளச் சாராயம் வைத்திருந்த சசிகுமார், குடிகந்துர் பகுதியில் 110 லிட்டர் வைத்திருந்த முருகன், திருவண்ணாமலை நகரம் கல்நகர் பகுதியில் 20லிட்டர் வைத்திருந்த நீலா, ஆகியோரையும் காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளச்சாராயம்

ABOUT THE AUTHOR

...view details