தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தார்வாடில் கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்! - latest accident news

தாட்வாடில் டிப்பர் லாரி ஒன்று, பயணிகளுடன் சென்ற டெம்போ டிராவலர் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

8 killed in Karnataka Road Accident, தார்வாட் விபத்து, கர்நாடக விபத்து, 8 பேர் உயிரிழப்பு, Karnataka Road Accident, கர்நாடக சாலை விபத்து, தேசிய செய்திகள், வெளி மாநில செய்திகள், national news in tamil, accident news,  latest accident news, latest accident videos
தார்வாடில் நடந்த கோர விபத்து

By

Published : Jan 15, 2021, 10:00 AM IST

தார்வாட் (கர்நாடகம்):பயணிகள் வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தார்வாட் மாநிலத்தில் இட்டிகட்டி எனும் இடத்தில் வைத்து வேகமாக வந்த டிப்பர் லாரி, பயணிகளுடன் சென்ற டெம்போ டிராவலர் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த வாகனம் தாவனகிரே முதல் பெலகாவிக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

இதில் முதலில் வாகனத்தில் சென்ற 5 பேர் இறந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சூழலில் அவர்களில் 3 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். அதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

தார்வாடில் நடந்த கோர விபத்து

இதில் 2 பேர் மட்டும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தார்வாட் மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details