துபாயிலிருந்து எமரேட்ஸ் சிறப்பு மீட்பு விமானம் இன்று (நவம்பர் 6) சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா். அப்போது, ராமநாதபுரத்தைச் சோ்ந்த இப்ராகீம்(42), அலி சதூா்தீன்(45), ஜபீா்கான்(28), அபுபக்கா் சித்திக்(23) ஆகிய நான்கு பேரும் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, அவசரமாக வெளியில் சென்றனர்.
ரூ.37.3 லட்சம் மதிப்புள்ள 713 கிராம் தங்கம் பறிமுதல் - gold seized in chennai airport
சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 37.3 லட்சம் மதிப்புள்ள 713 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், அது தொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர்.
ஆனால், சுங்கத்துறையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து வெளியே சென்ற நான்கு பேரையும் மீண்டும் அழைத்து வந்தனா். தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா். அப்போது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கபேஸ்ட், தங்கக் கட்டிகள், தங்க செயின்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 713 கிராம் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ. 37.3 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த சுங்கத்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.