திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்திலுள்ள கோரகப்பா கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் கச்ஹாச்லா. இவருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தப் பெண் குழந்தைக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆறு வயது பெண் குழந்தை தோழி.
இரு குழந்தைகளும் வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் அன்றைய தினம் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையை காணவில்லை. இதையடுத்து அக்குழந்தையின் பெற்றோர் அப்பகுதி முழுக்க தேடினர். எனினும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நடுக்காட்டில் அப்பெண் குழந்தை உயிரற்ற நிலையில் கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்தன.
குழந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுத பெற்றோர், நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.