தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2020, 8:56 AM IST

ETV Bharat / jagte-raho

கோவையில் 50 காேடி பண மோசடி: தனியார் நிதி நிறுவன இயக்குனர் கைது!

நிதி நிறுவனம் நடத்தி சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன இயக்குனரை, கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

50 காேடி பண மோசடி
50 காேடி பண மோசடி

கோயம்புத்தூர் : கோவை பீளமேடு, சிவசாமி லேஅவுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரிதுவர்ணன் (37). இவர், பீளமேடு பகுதியில், தனியார் நிதி நிறுவனம் நிறுவனம் நடத்தி வந்தார். தனது நிதி நிறுவனத்தில், ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், முதலீடு செய்த நாளிலிருந்து, தொடர்ந்து 100 நாட்களுக்கு, 2.8 விழுக்காடு வட்டி தரப்படும் அல்லது குறிப்பிட்ட நாட்கள் கழித்து இரு மடங்கு தொகை திருப்பித் தரப்படும் என விளம்பரம் செய்தார்.

இதனை நம்பி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரிதுவர்ணனின் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அறிவித்தபடியே சிலருக்கு, முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப வட்டித் தொகையை கொடுத்துள்ளார். அதன் பின்னர் யாருக்கும் பணம் தரப்படவில்லை. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள், அந்த நிதி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது, அந்நிறுவனம் மூடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். பணமோசடி தொடர்பாக, தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குநர் ரிதுவர்ணன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் கலையரசி தலைமையிலான கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ரிதுவர்ணன் உள்ளிட்டோர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் இந்நிறுவனத்தினர், சுமார் ரூ.50 கோடி வரைக்கும் பணம் மோசடி செய்து இருக்கலாம் எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, தனியார் நிதி நிறுவனத்தினர் இயக்குநர் ரிதுவர்ணனை காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் வழங்க வலியுறுத்தி போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details