தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

அபிராமம் எஸ்.ஐ கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை - Abiram SI murder case

ராமநாதபுரம்: அபிராமம் எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

murder
murder

By

Published : Sep 23, 2020, 7:59 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் அபிராமம் முத்தாதிபுரத்தை சேர்ந்த போஸ். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது நந்திசேரி விலக்குரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கி கொலை செய்தது.

அப்போது அவ்வழியாக வந்த அபிராமம் காவல் சார்பு ஆய்வாளர் கீழ்க்குடி சுப்பிரமணியன் அந்த கும்பலை பார்த்து விசாரித்த போது அவரையும் சரமாரியாக அரிவாளால் தாக்கிவிட்டு சென்றனர். பலத்த காயத்துடன் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிவசுப்பிரமணியன் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மறைந்த துரைப்பாண்டி, முனியசாமி (38), இருவரும் வழக்கிலிருந்து நீக்கப்பட்டனர். முருகேசன் (38), ஞானவேல் பாண்டியன் (39), ரவிசண்முகம் (36), திருமூர்த்தி (39), முத்துராமலிங்கம் (42), ஆயுள் தண்டனை வழங்கி தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

காவலரை தாக்கிய வழக்கில், ஏழு வருடம் சிறைத்தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மலர்மன்னர் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:சமூக வலைதள காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் கோரிய மனு - அக்.14 விசாரணை

ABOUT THE AUTHOR

...view details