திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியின் உத்தரவுபடி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து, ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு! - தமிழ் குற்ற செய்திகள்
திருவண்ணாமலை: ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் அழித்தனர்.
காவல்துறையினர் நடத்திய இந்த தேடுதல் வேட்டையில், கானமலை பகுதியில் சுமார் 400 லிட்டர் அளவிலான கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கள்ளச்சாராய ஊரலை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை மண்ணில் ஊற்றி அழித்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்துவரும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வந்தாலும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது, காவல்துறையினரால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் தடுக்க முடியவில்லை என்பதையே காட்டுகிறது.