தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வு; காதலன் உள்பட நால்வர் கைது!

பேஸ்புக் காதலனை பார்க்க சென்ற பள்ளி மாணவியை கும்பல் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் நால்வரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

child_ harassment
child_ harassment

By

Published : Oct 10, 2020, 1:54 AM IST

கிருஷ்ணகிரி: கேரள மாநிலம் கோழிக்கோடு, முக்கம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு, பேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்அப் வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தரணி (22) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தினமும் மணிக் கணக்கில் பேச தொடங்கிய நட்பு காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இருவரும் நேரில் சந்திக்க ஆசைப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு, கோழிக்கோடு, மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் (22) என்ற வாலிபருடன் அறிமுகமாகியுள்ளார். மாணவி விபின்ராஜிடம், தனக்கு கிருஷ்ணகிரியில் காதலன் இருப்பதாகவும், அவரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு, காதலனை சந்திக்க தான் உதவுவதாக விபின்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

புதிய நண்பரை நம்பிய மாணவி, கடந்த 2ம் தேதி நேரில் சந்திக்க வருவதாக காதலனிடம் கூறி, விபின்ராஜ் அவரது நண்பர்களான அஜித்ராஜ் (23), ஜோபியன் (23) ஆகியோருடன் ஒரு காரில், கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மறைவான பகுதியில் காரை நிறுத்தி 3 பேரும், மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். மாணவி காதலன் தரணிக்கு தகவல் கொடுக்க, அவர் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையில், மாணவி மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், கேரள மாநிலம் முக்கம் போலீசில் புகார் செய்தனர். மாணவியின் செல்போன் சிக்னல் அடிப்படையில் விசாரித்த கேரல காவலர்கள், மாணவி, கிருஷ்ணகிரியில் இருப்பதை அறிந்து, மாணவியை மீட்டனர்.

மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், கும்பல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் மூவரையும் கேரள காவலர்கள் கேரளாவில் கைது செய்துள்ளனர். அதே போல் பேரிகை காவலர்கள் காதலன் தரணியை கைது செய்தனர்.

இதையும் படிங்க :பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது - அமைச்சர் சரோஜா

ABOUT THE AUTHOR

...view details