தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு (70). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் நேற்று (நவ. 09) இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க வாசலை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த 39 பவுன் நகை, இரண்டு லட்ச ரூபாய் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் காலையில் எழுந்து பீரோவை பார்த்த வேலு, பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இது குறித்து நாலாட்டின்புத்தூர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.