புனே விமான நிலையத்தில் நேற்று சுங்க அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு இலங்கைப் பெண்களை நிறுத்தி அவர்களின் உடைமைகளை ஆய்வுசெய்தனர்.
புனே விமான நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
மும்பை: விமானம் மூலம் கடத்த முயன்ற 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை புனேவைச் சேர்ந்த சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
pune customs
அதில், 914.25 கிராம் எடையுள்ள24 கேரட் தங்கச் சங்கிலி, வளையல்கள், மற்றும் பிஸ்கட் தங்கக்கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அவற்றை பறிமுதல்செய்து, இரண்டு பெண்களை கைது செய்தனர்.
கடத்த முயன்ற தங்கத்தின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் என்றும், இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் சுங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.