விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக எம்.ரெட்டியாப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த மூன்று பெண்கள் காவல்துறையினரை கண்டதும் திடீரென ஓட்டம் பிடித்தனர். பெண்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, இந்த மூன்று பெண்களும் அதே ஊரைச் சேர்ந்த மீனாட்சி, தாரக நாச்சியார், சமுத்திரகனி என்பது தெரியவந்தது.