தருமபுரி:அக்டோபர் 3ஆம் தேதி, தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குண்டல்பட்டி அருகே, அவ்வழியாக செல்வோரை மிரட்டி சிலர் வழிபறி கொள்ளையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மதிகோண்பாளையம் காவல் ஆய்வாளர், அம்மாதுரை தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், சிவகங்கை மாவட்டம், சுண்ணாம்பு காலவாசல் பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (33). முத்துபட்டி நைனான்குளம் பகுதியைச் சேர்ந்த சூர்யா( எ) உதயசூரியன் ( 21), திருச்சி மாவட்டம் முசிறி, சேர்குடி அம்மன் நகரை சேர்ந்த மதி( எ) மதியழகன் (28) என்பது தெரிய வந்தது. இம்மூவரும் நண்பர்கள் எனவும் இவர்கள் பல இடங்களில் கொலை கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்தது. அதே போல், அக்., 3ஆம் தேதி குண்டல்பட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.