சென்னை தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம், முல்லை நகர், முடிச்சூர் சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் வெங்கடேசன். இவர் வழக்கம் போல் நேற்று (ஜன.8) கடையை மூடிவிட்டு இன்று (ஜன.9) காலை திறந்து கடைக்குள் சென்ற போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் கடையை சோதனையிட்ட போது, கல்லாவில் இருந்த 21ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் சிகரெட்டுகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தாம்பரம் காவல்நிலையத்திற்கு புகாரளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சூப்பர் மார்க்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.