சென்னை மற்றும் ஆந்திராவின் தடா பகுதிகளில் இயங்கி வரும் தனியார் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் ஒன்று, பல்வேறு தொழிற்சாலைகளுக்கும், உற்பத்தி கூடங்களுக்கும் பணியாட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், தகவலின் பேரில் இந்நிறுவன இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், சென்னை மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் கடந்த 6 ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அதில் போலியான நிறுவனங்களின் பெயர்களில் இந்நிறுவனம் முறைகேடாக உள்ளீட்டு வரிப்பலன்கள் பெற்றது தெரியவந்தது.
போலி கணக்கு காட்டி ரூ.21 கோடி வரிப்பலன் பெற்ற இருவர் கைது! - சென்னை மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு
போலி பரிவர்த்தனைகளை கணக்கு காட்டி 21 கோடி ரூபாய்க்கு மோசடியாக ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப் பலன்களை பெற்ற இருவரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
![போலி கணக்கு காட்டி ரூ.21 கோடி வரிப்பலன் பெற்ற இருவர் கைது! arrest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10165083-321-10165083-1610103177464.jpg)
முதற்கட்ட விசாரணையில், அத்தனியார் நிறுவன இயக்குநரும், அதன் கணக்காளரும் இணைந்து இம்மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன்படி, ரூ.121.76 கோடிக்கு பரிவர்த்தனை செய்ததாக போலியாக கணக்கு காட்டி, சுமார் ரூ.21.56 கோடி மோசடியாக ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிப்பலன்களை பெற்றுள்ளனர். இதையடுத்து தனியார் மனிதவள மேம்பாட்டு நிறுவன இயக்குநர் மற்றும் அவரது கணக்காளர் ஆகியோரை கைது செய்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இம்மோசடி குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விஜய் டிவி அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு பார்சல்: 10 வருடத்திற்குப் பிறகு குற்றவாளி கைது!