ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலைச்செல்வன் மற்றும் குணசேகரன். இவர்கள் இருவர் மீதும் 2 கொலை வழக்குகள் உட்பட கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு கருங்கல்பாளையம் பகுதியில் பிரகலாதன் என்பவரை கொலையில் தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக கலைச்செல்வன், குணசேகரன் ஆகிய இருவரும் ஈரோடு நீதிமன்றத்திற்கு சென்றனர். பின்னர் வீரப்பன் சத்திரம் அடுத்துள்ள பெரியகுட்டை வீதி சந்தில் இருவரும் மது அருந்தினர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் கத்தி, அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவரையும் தாக்கிவிட்டு சென்றது.