திருச்சி: திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி உமாமகேஸ்வரி (36). இவர்கள் இருவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே 'அபெக் கேபிடல் சொல்யூசன்' என்ற நிதி நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.
இவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், மூன்று மாதத்தில் பல மடங்காகத் திருப்பி தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இதனை நம்பி திருச்சி பெரியமிளகுபாறை புதுத்தெருவைச் சேர்ந்த சத்தியசீலன் (32) என்பவர் தானும், தன் நண்பர்கள், உறவினர்களிடமிருந்தும் வசூல்செய்தும் என சுமார் ரூ. 2.50 கோடி முதலீடு செய்துள்ளார்.