தூத்துக்குடி:கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான காவல்துறையினர் நேற்று (செப். 22) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி செவன்த்டே பள்ளி அருகே நடராஜபுரத்தைச் சேர்ந்த முனியசாமி (40), சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த முரளிதாஸ் காந்தி (40) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.