தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குடியாத்தம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது - காவல் துறையினர்

மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்களை சிறப்பு குழுவினர் கைது செய்தனர்.

fake-doctors
fake-doctors

By

Published : Oct 6, 2020, 8:08 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மருத்துவம் படிக்காமல் சிலர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது மற்றும் ஊசி போடுவதாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தொடர் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, குடியாத்தம் அரசு முதுநிலை மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், காவல் துறையினர், வருவாய் துறையினர் குடியாத்தம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், குடியாத்தத்தை அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் வெங்கடேசன் என்பவரும், என்.எஸ்.கே. நகரில் 10-ஆம் வகுப்பு படித்த கோவிந்தசாமி என்பவரும் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலி மருத்துவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஊசிகள், மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க : காதல் கைகூடாத சோகம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details