தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தங்க தாலி பறிப்பு: இருவர் கைது! - ஈரோடு குற்ற செய்திகள்

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க தாலியை பறித்துச் சென்ற இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை உள்பட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

chain snatching in erode
chain snatching in erode

By

Published : Dec 26, 2020, 11:36 PM IST

ஈரோடு: நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த என்பவர், தனது மனைவி தீப லட்சுமியுடன் கருங்கல்பாளையம் சாய்பாபா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார்‌. கே.என்.கே சாலையில் சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த இருவர், 3.5 பவுன் தங்க தாலியை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல் துறையினர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி, அருண்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். நண்பர்களான இருவரும் பணக்காரர்களாக வேண்டும் என்ற ஆசையில் இந்த திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர்களிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 11 உயர் ரக கைப்பேசிகள், 20 ஆயிரம் ரூபாய் பணம், மடிக்கணினி உள்பட விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details