தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 40 அடி நீளம் கொண்ட கண்டெய்னரில் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே உள்ள சரக்கு பெட்டக முனையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அந்த கன்டெய்னரில் தேங்காய் மூட்டைகள், துபாய் ஜெபல்அலி துறைமுகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த கண்டெய்னரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.