தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கேரளாவுக்கு கடத்தப்பட்ட 16 டன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது! - 16 tonnes of rice seized in kanniyakumari

கன்னியாகுமரி: தூத்துக்குடியிலிருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு லாரி மூலம் கடத்திச் செல்லப்பட்ட 16 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கேரளாவுக்கு கடத்தப்பட்ட 16 டன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!
கேரளாவுக்கு கடத்தப்பட்ட 16 டன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

By

Published : Oct 23, 2020, 12:28 AM IST

தூத்துக்குடி மாவட்டம் களியக்காவிளை வழியாக லாரியில் பதுக்கி கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில், களியக்காவிளை பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை மையங்களை அமைத்த காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் லாரி ஒன்று வேகமாக வந்தது.

இதனைத் தொடர்ந்து, அதை தடுத்து நிறுத்த காவலர்கள் முயற்சி செய்தபோதே, பாதி வழியில் அதை ஓட்டிவந்த நபர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

அவரை விரட்டி பிடித்த காவலர்கள், லாரியை சோதனை செய்தபோது, அந்த லாரியில் 16 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதனை ஓட்டி வந்தவரை கைது செய்து, விசாரித்தனர்.

விசாரணையில், அவர் திக்குறிச்சி பகுதியை சேர்ந்த விஜில் என்பதும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிந்த காவல் துறையினர் அவரிடம் மேலதிக தகவல்களைப் பெற விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details