தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கடையின்  பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை - Thiruvallur

திருவள்ளூர்: திருநின்றவூர் தனியார் வங்கி அருகே இருந்த கடை ஓன்றில் 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கி அருகே இருந்த கடை பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை

By

Published : Apr 20, 2019, 3:25 PM IST

திருநின்றவூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 48. இவர் திருநின்றவூர் சி.டி.எஸ் சாலையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று வியாபாரம் மூலம் கிடைத்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை இவர் கல்லாவில் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து இன்று காலை அந்த பகுதியில் சென்ற ஆட்டோகாரர் ஒருவர் இவரது கடையின் ஷெட்டர் பாதி திறந்து கிடப்பதை பார்த்து சந்தேகமடைந்துள்ளார். உடனடியாக கடையின் ஷட்டர் திறந்திருப்பது குறித்து ஆட்டோக்காரர் சீனிவாசனிடம் தகவல் அளித்துள்ளார்.

தனியார் வங்கி பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை

இதுகுறித்து, திருநின்றவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details