தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

போலி செயலி உருவாக்கி 15 லட்சம் ரூபாய் மோசடி: இருவர் கைது - police investigation

சென்னை: மோகன் என்பவரிடம் போலி செயலியை உருவாக்கி 15 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

chennai
chennai

By

Published : Sep 23, 2020, 6:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர் மோகன் (42). இவர், சென்னை அடையாறு இந்திரா நகரில் வசித்து வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கோவையைச் சேர்ந்த கல்யாண் என்பவர் மூலம் திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற நபர் இவருக்கு நண்பராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், பிரபாகரன் மோகனிடம் நமது நாட்டில் பேடிஎம் (Paytm) செயலி போன்று வெளிநாட்டில் பணிவர்த்தனைக்காக Swift global pay insta merchant pay போன்ற செயலிகள் உள்ளன. இந்த செயலிகளின் wallet ஐ பயன்படுத்தி இந்தியாவில் பணமாக்கி கொடுத்தால் நமக்கு நல்ல கமிஷன் கிடைக்கும் எனக் கூறியதற்கு மோகனும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, பிரபாகரன், பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் ரெட்டி கொடுத்த இணையதள முகவரி மூலம் மோகனுக்கு இரண்டு செயலிகளுக்கு அக்கவுண்ட் ஓபன் செய்து கொடுத்துள்ளார். சில நாள்களுக்கு பிறகு, இரண்டு கணக்குகளில் 40 லட்சம் டாலர் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக 2 கோடி ரூபாயாக மாற்றி எங்களுக்கு தர வேண்டும் என்று ரமேஷ் ரெட்டி மற்றும் பிரபாகர் ஆகியோர் மோகனிடம் கூறியுள்ளனர்.

ஆனால், அவர்கள் கூறியதை போல் பணத்தை எடுக்க முயற்சி செய்த மோகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பரிவர்த்தனையும் செய்யமுடியாத நிலையில், தனது சொந்த ஊரான ஆற்றூருக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து ஆற்றுருக்கு காரில் சென்ற ரமேஷ் ரெட்டியும், பிரபாகரனும் கடந்த 8ஆம் தேதி மோகனை தனியாக பேச வர வழைத்து 40 லட்சம் டாலரை கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், மோகனை காரில் வைத்து கடத்தியதோடு தங்களுக்கு உடனடியாக 50 லட்சம் ரூபாய் வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். காரிலேயே சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட மோகன், தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து பத்து லட்சத்து 15ஆயிரம் ரூபாய் ரமேஷ் ரெட்டியின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் தனியார் வங்கியில் வீட்டு கடனுக்காக வாங்கிய 5.60 லட்சம் ரூபாய் பணத்தை இரு தினங்களில் மூன்று தவணையாக கொடுத்துள்ளார்.

மோகனிடம் பணத்தை பெற்றுக்கொண்ட ரமேஷ் ரெட்டி, பிரபாகரனும் தலைமறைவாகினர். இதனால், சந்தேகமடைந்த மோகன் உடனடியாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் இச்சம்பவம் குறித்து புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் பிரபாகர் மற்றும் ரமேஷ் ரெட்டியின் மொபைல் நம்பரை டிரேஸ் செய்தபோது அவர்கள் இருவரும் தி.நகரில் ஒரு தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தத. இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பணியிடமாறுதல் கோரி 3ஆவது நாளாக கர்ப்பிணி தொடர் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details