திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றி அடர்ந்த மரங்கள் நிறைந்து காணப்படுவதால் பாம்பு, மயில், குரங்குகள் உள்ளிட்ட பல உயிரினங்களை அதிகளவில் காண முடியும்.
இந்நிலையில் ரோப்கார் நிலையம் அருகில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்க முடியாமல் சுருண்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரோப்கார் நிலைய ஊழியர்கள், உடனடியாக வனத் துறையினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.