தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

133 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் - சென்னை விமான நிலையம்

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா மீட்பு விமானத்தில் கடத்திக்கொண்டு வரப்பட்ட ரூ.6.93 லட்சம் மதிப்புடைய 133 கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது.

133 gram gold seized from chennai airport
சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

By

Published : Oct 3, 2020, 11:22 PM IST

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் இன்று (அக்டோபர் 3) அதிகாலை வந்தடைந்தது. அதில், வந்த 117 பயணிகளையும் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது மதுரையைச் சேர்ந்த முகமது சலீம் சுல்தான் (32) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவருடைய உடமைகள் சோதனையிடப்பட்டன. பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டபோது, உடலின் பின்பகுதியில் 2 சிறிய நெகிழி பார்சல்களை மறைத்துவைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்தப் பார்சலை எடுத்துப் பிரித்து பார்த்தபோது 133 கிராம் எடையுள்ள உருண்டை வடிவிலான தங்கப்பசைகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் சா்வதேச மதிப்பு ரூ.6.93 லட்சம்.

பின்னர் சுங்கத் துறையினா் தங்கத்தைப் பறிமுதல்செய்து பயணியையும் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் போராட்டம், காதலை ஏற்க மறுத்த தோழி; கல்லூரி மாணவன் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details