கோயம்புத்தூர் சாலை அருகே சிடிசி மேடு தில்லை நகர் அம்மா உணவகத்துக்கு எதிரே கேட்பாரற்று கேரள மாநில பதிவு எண் கொண்ட வாகனம் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்த காவல் துறையினர் அங்கு நின்றுகொண்டிருந்த KL 51 M 1367 என்ற பதிவு எண் கொண்ட மஹேந்திரா பொலிரோ வாகனத்தை ஆய்வுசெய்தனர்.
அப்போது அதில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் நான்கு மூட்டைகளில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கு. தமிழ்ச்செல்வன், பொள்ளாச்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ் வேலுச்சாமி ஆகியோர் அங்கு வந்தனர்.