தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வேளாண் அலுவலர் வீட்டில் 11 சவரன் நகை கொள்ளை - விருதுநகர் காவல்துறையினர் விசாரணை

விருதுநகர்: பூட்டிக் கிடந்த வேளாண் அலுவலர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவை உடைத்து 11 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

money theft
money theft

By

Published : Nov 10, 2020, 9:44 AM IST

விருதுநகர் என்ஜிஓ காலனி பாரதி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (53). இவர் ராமநாதபுரத்தில் வேளாண்மை அலுவலராக பணி புரிந்து வருகிறார். கடந்த 6ஆம் தேதி குடும்பத்தோடு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இன்று (நவ.10) காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக விருதுநகர் ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பீரோ உடைக்கப்பட்டு 11 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பட்டாசு புகையால் கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details