தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சூதாட்டம் விளையாடிய 11 பேர் கைது - gambling

சென்னை: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சூதாட்டம் விளையாடிய 11 பேர் கைது
சூதாட்டம் விளையாடிய 11 பேர் கைது

By

Published : Jan 10, 2021, 3:27 PM IST

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரி நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் பார்வதி, இவரது வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

சூதாட்டம் விளையாடிய 11 பேர் கைது

சோதனையில் சூதாட்டம் ஆடுவது தெரியவந்தது. மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள், 72,780 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் ஏழு பேர், பெண்கள் நான்கு பேர் என மொத்தம் 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க :ரூ.50க்காக மனைவியைக் கொன்ற கணவன்

ABOUT THE AUTHOR

...view details