அபிராமபுரம் காமராஜர் காலனியில் வசித்து வரும் விக்னேஷ் - காயத்ரி தம்பதிக்கு பிறந்து 11 மாதங்களேயான தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று காயத்ரி சமையலறையில் சூடான காய்ச்சிய பாலை ஊற்றிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவரின் புடவையை பிடித்து குழந்தை இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக கைத்தவறி சூடான பால் குழந்தையின் மீது கொட்டியது. இதனால் குழந்தைக்கு உடல் முழுவதும் வெந்து படுகாயம் ஏற்பட்டது.
சூடான பால் கொட்டி குழந்தை படுகாயம்! - காவல்துறை
சென்னை: பிறந்து 11 மாதங்களேயான குழந்தை மீது சூடான பால் கொட்டி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
burn
உடனே குழந்தையை அவரது பெற்றோர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு தொடர்பாக அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முற்பட்ட இளைஞர் கைது!
Last Updated : Apr 16, 2020, 10:22 AM IST