தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வருபவர் வின்சென்ட். இவர், துறைமுக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று, இரவு உணவிற்குப் பிறகு வின்செண்டும், அவருடைய மனைவி ஜான்சியும் வீட்டின் அனைத்து அறைக் கதவுகளையும் பூட்டிவிட்டு, வழக்கமாக தாங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கச் சென்று விட்டனர்.
துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை: குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு! - துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
தூத்துக்குடி: துறைமுக ஊழியராகப் பணியாற்றி வருபவர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இன்று காலையில் ஜான்சி எழுந்து வந்த பார்த்தபோது, வீட்டில் பீரோ இருந்த அறை கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்றுப் பார்த்ததில், பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த பொருள்கள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன.
மேலும் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் காவல் துறையினர் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.
TAGGED:
100 பவுன் நகை கொள்ளை