தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கஞ்சா கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்! - மதுரையில் கஞ்சா விற்பனை

கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

10 years jail for cannabis sellers
10 years jail for cannabis sellers

By

Published : Oct 22, 2020, 10:09 PM IST

மதுரை: கஞ்சா வழக்கில் சிக்கிய மூவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி போதை பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால், கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட கருத்த கண்ணன் மகன் பரமன் (40), பிச்சை ஏத்தா மகன் ஷேக் அலாவுதீன் (30), மாடசாமி மகன் பாண்டியன் (29) ஆகியோர் மீதான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இவ்வேளையில் இன்று (அக். 22) இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட முதன்மை நீதிபதி, குற்றவாளிகள் மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details