தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

உ.பி-யில் பத்து வயது சிறுமிக்கு முத்தலாக்! - முத்தலாக்

உத்தரப்பிரதேசம்: பத்து வயது சிறுமியைத் திருமணம் செய்து முத்தலாக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tripple Talaq
Tripple Talaq

By

Published : Aug 23, 2020, 5:26 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இந்தச் சிறுமிக்கு தனது சகோதரியின் மைத்துனருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து, பின்னர் முத்தலாக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி சிறுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அவர் பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் முத்தலாக் கொடுக்கப்பட்டது. சிறுமியின் சகோதரி வற்புறுத்தலின் பேரில், திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் குழந்தைப் பராமரிப்பு உதவி எண்ணை நிர்வகிக்கும் குழுவினர், சிறுமியின் கிராமத்திற்கு ஆலோசனைக்காக சென்றிருந்த போது, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து குழந்தைப் பராமரிப்பு உதவி எண்ணை நிர்வகிக்கும் குழு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர். மேலும் இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details