ஈரோட்டைச் சேர்ந்த மாகாளியப்பனின் உறவினர்கள் மூன்று பேரிடம் புதுகள்ளி வலசைச் சேர்ந்த சந்திரன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகத் தெரிகிறது. இதுவரை 10 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாகாளியப்பன் கூறுகையில், "சந்திரன் என்பவர் தனக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஐ.ஏ.எஸ் அலுவலர்களைத் தெரியும் என்று எனது உறவினர்கள் மூன்று நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்பணமாக 1 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஒரு வாரத்தில் நேர்காணலுக்கு கடிதம் வரவழைத்து சென்னைக்கு அழைத்துச் சென்றார்.