தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி பப்பாளிப் பழம் ஏற்றிவந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில், 20 செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து செம்மரக்கட்டைகளை அவ்வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவற்றைக் கடத்தி வந்த சித்தூரை சேர்ந்த ரவி, காளஹஸ்தியைச் சேர்ந்த வெங்கய்யா ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.