தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வாகன சோதனையில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது - இளைஞர்கள்

எளாவூர் சோதனைச்சாவடியில் போலீசாரின் வாகன சோதனையில், 1 கிலோ, 200 கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

kanja
kanja

By

Published : Oct 5, 2020, 3:55 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில், ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (அக்.5) அதிகாலையில், இரு சக்கர வாகனம் ஒன்றில், 3 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை தடுத்த போலீசார், விசாரணை செய்துள்ளனர். அப்போது மூவரும் முன்னுக்கு பின்னாக தகவல் தர, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், சென்னை கிறுக்கம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (19) பல்லாவரம் பொழிச்சலூரை சேர்ந்த விஜய் (25), பாலசத்யா (19) ஆகிய மூவரும், ஆந்திராவிலிருந்து சென்னையை நோக்கி கஞ்சா கடத்தி வந்ததாக தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து, 1 கிலோ, 200 கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, இளைஞர்களை மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க :ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details