பெய்ஜிங்: சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, அவரே அதிபராகவும் இருப்பார்.
அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, கடந்த 16ஆம்தேதி தொடங்கி, நேற்று(அக்.22) நிறைவடைந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் 2,300 பேர் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக அதிபர் ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மூன்றாவது முறையாக ஜின்பிங் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில், மேலும் ஐந்து ஆண்டுகள் அதிபராக நீடிக்கவுள்ளார்.