காத்மாண்டு:தேசிய புவியியல் கழக வல்லுநர்கள் குழு, பல்வேறு வானிலை நிகழ்வுகளை அளவிடுவதற்காக எவரெஸ்ட் சிகரத்தில் 8,830 மீட்டர் உயரத்தில் தானியங்கி வானிலை நிலையத்தை (உலகின் மிக உயரமான வானிலை நிலையம்) நிறுவியுள்ளதாக நேபாள ஊடகங்கள் இன்று (மே 19) செய்தி வெளியிட்டுள்ளன.
சூரிய சக்தியால் இயங்கும் இந்த வானிலை நிலையத்தின் மூலம் காற்றின் வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை, காற்றழுத்தம், பனியின் மேற்பரப்பு உயரத்தில் உள்வரும், வெளியேறும் கதிர்வீச்சு போன்ற வானிலை நிகழ்வுகள் அளவிடப்பட உள்ளது. அமெரிக்காவின் அப்பலாச்சியன் மாநில பல்கலைக்கழக நிபுணர் குழு விஞ்ஞானி பேக்கர் பெர்ரி தலைமையிலான குழு தானியங்கி வானிலை நிலையத்தை உலகின் மிக உயரமான நிலையத்தை எவரெஸ்ட் சிகரத்தில் அளவிட்டு நிறுவினர்.