புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் 19வது எடிஷன் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடகள பிரிவில் 200 மீட்டர் ஸ்பிரிண்ட் டபுள் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் வென்று தனது மூன்றாவது பட்டத்தை பதிவு செய்து உள்ளார்.
இதன் மூலம் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அடுத்தடுத்து பதக்கம் வென்று சாதனை படைத்த 5வது வீரர் என்ற பெருமையை நோவா லைல்ஸ் பெற்றார். முன்னதாக மாரிஸ் கிரீன் (1999), ஜஸ்டின் காட்லின் (2005), டைசன் கே (2007) மற்றும் உசேன் போல்ட் இந்த சாதனையை படைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோவா லைல்ஸ், கடந்த வாரம் இறுதியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 19.52 விநாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். அதே போல் போட்ஸ்வானாவின் 20 வயதான லெட்சைல் டெபோகோவை 19.81 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் கார்ல்சன்.. இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தா!
நோவா லைல்ஸ் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 19.52 விநாடிகளில் கடந்த மூன்றாவது வீரர் ஆவார். முன்னதாக 2009ஆம் ஆண்டு உசேன் போல்ட் 19.19 விநாடிகளில் கடந்ததே அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. நாளை 4x100 மீட்டர் ஓட்டம் நடைபெற உள்ளது. அமெரிக்க அணி தகுதி சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், தானும் அணியுடன் இணைந்து மற்றொறு தங்கத்தை வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று நோவா லைல்ஸ் கூறினார்.
மேலும், புடாபெஸ்டில் எனது செயல் எனது நாட்டிற்கு உரியது என்றும், ஏன்னென்றால் இந்த வெற்றி எனக்கானது அல்ல என்று அவர் கூறினார். எனது மக்களுக்கு ஆனது மட்டுமின்றி போட்ஸ்வானாவில் உள்ள இளைஞர்களுக்கு நான் முன் உதாரனமாக இருப்பேன் என்று நம்புகிறேன் என்று லைல்ஸ் தெரிவித்தார்.
போஸ்ட்வானாவில் தடகள போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை குறைவு எனக் கூறப்படும் நிலையில், லைல்சின் வெற்றி இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:உலக தடகள சாம்பியன்ஷிப்.. இறுதி சுற்றுக்கு நீரஜ் சோப்ரா முன்னேற்றம்.. 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி!